தேசியம்
செய்திகள்

சில விமான சேவைகளை இடைநிறுத்த Air கனடா முடிவு?

New York நகரின் JFK விமான நிலையத்திற்கான சில விமான சேவைகளை Air கனடா இடைநிறுத்த உள்ளது.

Jet எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த முடிவை Air கனடா நிறுவனம் எடுத்துள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக Toronto, Montreal நகரங்களில் இருந்து New York John F. Kennedy சர்வதேச விமான நிலையத்திற்கான தனது விமான சேவைகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிறுத்தி வைப்பதாக Air கனடா நிறுவனம் வெள்ளிக்கிழமை (17) அறிவித்தது.

இந்த இடைநீக்கம் June 1 முதல் ஆரம்பித்து October 25 வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத் தடைகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், மாற்றுப் பயணத் திட்டங்களுடன் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என Air கனடா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

Ontario மாகாண ஆளுநர் – கனடாவுக்கான இலங்கை துணை தூதுவர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Lankathas Pathmanathan

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment