தேசியம்
செய்திகள்

Liberal கட்சியின் 2026 தேசிய மாநாடு ஆரம்பம்

ஆளும் Liberal கட்சியின் தேசிய மாநாடு வியாழக்கிழமை (09) ஆரம்பமானது.

2026 தேசிய மாநாட்டுக்காக 4,500 Liberal உறுப்பினர்கள் Montreal நகரில் ஒன்று கூடுகின்றனர்.

மூன்று நாள் மாநாட்டின் போது, ​​கனடா முழுவதிலுமிருந்து கலந்து கொள்ளும் Liberal கட்சியினர் கலந்துரையாடல் நிகழ்வுகள், உரைகள், பல்வேறு குழு விவாதங்கள், கொள்கைப் பயிலரங்குகளில் பங்கேற்பார்கள்.

இந்த மாநாடு கொள்கைகளை விட, அடுத்த வாரம் நடைபெற உள்ள மூன்று முக்கிய இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக உத்வேகத்தை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் என Liberal வியூகவாதிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த மாநாட்டில் நிதி அமைச்சர் François‑Philippe Champagne, ‘Man in Motion’ அமைப்பின் நிறுவனர் Rick Hansen, முன்னாள் Liberal அமைச்சரும் Montreal நகர முதல்வருமான Soraya Martinez Ferrada, Liberal கட்சியின் தலைவர் Sachit Mehra, பிரதமர் Mark Carney ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள்.

தவிரவும் அண்மையில் கட்சிக்கு மாறிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழு விவாதங்களின் கலந்துரையாடுவார்கள்.

பிரதமரின் சிறப்புரைக்கு பின்னர், Montreal மாநாடு சனிக்கிழமை (11) நிறைவடைகிறது.

இதற்கு 36 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், Ontario-வில் இரண்டு, Quebec-கில் ஒன்று என மூன்று முக்கிய இடைத் தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள்.

நான்கு Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஐந்து உறுப்பினர்களின் கட்சி மாற்றத்தின் பின்னர், Liberal கட்சி நாடாளுமன்றத்தில் 171 ஆசனங்களைக் கொண்டுள்ளது.

April 13 நடைபெறும் மூன்று இடைத் தேர்தல்களிலும் அவர்கள் வெற்றி பெற்றால், பிரதமர் Mark Carney-க்கு நாடாளுமன்றத்தில் இரண்டு ஆசனங்கள் பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இரண்டு தொகுதிகளில் Liberal கட்சி எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்றவது தொகுதியிலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

பதவி விலகும் முன்னாள் அமைச்சர்?

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

கனடிய ஆயுதப் படைகளில் பாலியல் முறைகேடுகளில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment