தேசியம்
செய்திகள்

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு!

Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள Toronto மையப் பகுதியில் சாலை மூடல்கள் அமுலில் உள்ளன.

இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை இல்லை.

தவிரவும் சந்தேக நபர்கள் குறித்து காவல்துறையினர் எந்த தகவலையும் வழங்கவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து Toronto-வில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய துணைத் தூதரகங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கி சூட்டு விசாரணையின் ஒரு பகுதியாக Toronto காவல்துறையினர் RCMP உடன் இணைந்து பணியாற்றி வருவதாக Toronto நகர முதல்வர் Olivia Chow கூறினார்.

கடந்த இரண்டு வார இறுதிகளில் ஜெப ஆலயங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகளுக்கு பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Toronto நகர மையத்தில் உள்ள இந்த அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு ஓரளவு பாதுகாப்பு இருக்கும் அதே வேளையில், Ottawa-வில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு உள்ள அதே அளவிலான பாதுகாப்பு இந்தக் கட்டிடத்திற்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck

Lankathas Pathmanathan

Venezuela: கனடாவில் நாடளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

Lankathas Pathmanathan

அமெரிக்கா வரிகளை தளர்த்தினால் மதுபானங்கள் மீதான கனடாவின் தடை முடிவுக்கு வரும்?

Lankathas Pathmanathan

Leave a Comment