தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானதிற்காக $17.1 மில்லியனுக்கும் அதிகமான நிதி வாக்குறுதி!

தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானதிற்காக $17.1 மில்லியனுக்கும் அதிகமான நிதியும், நிதி வாக்குறுதிகளும் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற சங்கநாதம் நிகழ்வில் இந்த அறிவித்தல் வெளியானது.

தமிழ்ச் சமூக மையத்தின் நிறுவனர் குடும்பங்களுடன் இணைந்து சங்கநாதம் நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, மாகாண பிரதி அமைச்சர் விஜய் தணிகாசலம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன், மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory, நகரசபை உறுப்பினர்கள் பார்த்தி கந்தவேள், நீதன் சான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

$17.1 மில்லியன் என்ற இலக்கு எட்டப்பட்டது சமூகத்தின் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்த சமூக மைய குழு, இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தது.

தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால் திரட்டப்பட்ட இந்த நிதி வாக்குறுதி 2027-ஆம் ஆண்டின் இலைதுளிர் காலத்தில் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கான வழி வகுக்கிறது என இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்டுமானத்தின்போது ஏற்படும் எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்ள $21.7 மில்லியன் என்ற புதிய இலக்கை எட்டும் வரை நிதி சேகரிப்பு தொடரும் எனவும்  சமூக மையத்தின் நிர்வாக சபை அறிவித்துள்ளது.

Related posts

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

Lankathas Pathmanathan

தனது மாகாண சபை உறுப்பினரை கட்சியில் இருந்து விலக்கிய முதல்வர் Ford!

Lankathas Pathmanathan

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Lankathas Pathmanathan

Leave a Comment