September 14, 2026
தேசியம்
செய்திகள்

கனடியர்களுக்காக போராடுவேன்: தேசிய மாநாட்டில் Pierre Poilievre உறுதி

கனடியர்களுக்காக போராடுவேன் என Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.

Conservative கட்சியின் தேசிய மாநாடு Calgary நகரில் நடைபெறுகிறது.

அங்கு ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள மத்தியில் Pierre Poilievre வெள்ளிக்கிழமை (30) உரை நிகழ்த்தினார்.

மண்டபம் நிறைந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சார பாணியிலான உரையை Pierre Poilievre நிகழ்த்தினார்.

அவரது  50 நிமிட உரை, Liberal அரசின் கொள்கைகளை விமர்சிப்பதாக அமைந்தது.

கனடியர்கள் Liberal அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது என  Pierre Poilievre கூறினார்.

அவரது உரையைத் தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் Pierre Poilievre கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து வாக்களிக்கினறனர்.

2,500-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள் இந்த  வாக்கெடுப்பில் கலந்து கொள்கின்றனர்.
இது தேர்தல் தோல்வியின் பின்னர் முன்னெடுக்கப்படும் Conservative கட்சி மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும்.

September 2022-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை Pierre Poilievre ஏற்றுக் கொண்டதிலிருந்து அவரது தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சோதனையாக இந்த வாக்கெடுப்பு அமைகிறது

கடந்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Pierre Poilievre தலைமயிலான Conservative கட்சி தோல்வியடைந்த நிலையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பு முடிவு சனிக்கிழமை (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LJI Reporter ரம்யா சேது

 

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan

மக்கள் ஆதரவில் முன்னிலை பெறும் Ontario Liberal கட்சி?

Lankathas Pathmanathan

Leave a Comment