Alberta பிரிவினைவாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததாக கூறப்படுவது ‘தேசத்துரோகம்’ என British Colombia முதல்வர் David Eby தெரிவித்தார்.
Alberta பிரிவினைவாதக் குழுவின் உறுப்பினர்களுக்கும், Donald Trump நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு நடந்ததாக Financial Times செய்தி வெளியிட்டது.
இந்த சந்திப்பை “தேசத்துரோகம்” என David Eby வியாழக்கிழமை (29) விமர்சித்தார்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களை Alberta வாசிகள் என அடையாளப்படுத்த மறுத்த David Eby, Alberta வாசிகள் பெரும்பாலானோர் கனடாவுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என கூறினார்.
Alberta-வில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான விருப்பத்தையும், மக்கள் தங்கள் பேச்சுரிமையை பயன்படுத்துவதையும் தான் மதிக்கிறேன் எனவும் British Colombia முதல்வர் கூறினார்.
ஆனால் Alberta பிரிவினைவாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தது ஒரு எல்லை மீறிய நகர்வு என் அவர் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நகர்வு என்பதை Alberta முதல்வர் Danielle Smith, ஏனைய மாகாண முதல்வர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் David Eby அழைப்பு விடுத்தார்.
Ottawa-வில் பிரதமர் Mark Carney, மாகாண முதல்வர்களுடன் நடத்தும் சந்திப்பில் இந்த விடயம் குறித்து விவாதிக்க உள்ளதாக David Eby கூறினார்.
இந்த சந்திப்பு வியாளன் மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
