September 11, 2026
தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்திற்கு சொந்த நாணயம்?

Quebec மாகாணம் கனடாவில் இருந்து சுதந்திரம் அடைந்தால் பாவணைக்காக அதன் சொந்த நாணயம் இருக்க வேண்டும் என Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon தெரிவித்தார்.

சனிக்கிழமை (15) நடைபெற்ற தனது கட்சியின் தேசிய சபை கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Quebec அதன் சொந்த பணவியல் கொள்கை, மத்திய வங்கி ஆகியவற்றை கொண்டிருக்கும் என Paul St-Pierre Plamondon கூறினார்.

Parti Québécois படிப்படியாக வெளியிடும் Blue Book திட்டத்தின் இரண்டாம் பகுதியாக இந்த நாணயம் குறித்த அறிவித்தல் வெளியானது.

கனடிய டாலரை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருப்பது அல்லது அமெரிக்க நாணயத்தை ஏற்றுக்கொள்வது போன்ற தெரிவுகளையும் Parti Québécois கருத்தில் கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Parti Québécois கட்சியின் தேசிய சபை கூட்டம் Sherbrooke தொகுதியில் நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியை 2018-ஆம் ஆண்டு முதல் Quebec Solidaire (QS) கட்சியின் சார்பில்  தேசிய சட்டமன்ற உறுப்பினர் Christine Labrie பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

அண்மைய கருத்துக் கணிப்பு, இடதுசாரிக் கட்சியான Quebec Solidaire இந்தத் தொகுதியை Parti Québécois கட்சியிடம் இழக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

Related posts

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment