September 28, 2026
தேசியம்
செய்திகள்

தமிழ்ச் சமூக மையத்திற்கு $460,000 நிதி உத்தரவாதம்

தமிழ்ச் சமூக மையத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் கடந்த வார விடுமுறையில் $460,000 நிதி உதவி உத்தரவாதம் வழங்கப்பட்டது.

தாயகத்தில் உள்ள பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து சனிக்கிழமை (20) நடத்திய ஒன்றுகூடலில் இந்த நிதி உதவி உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜூனித்தா நாதன், Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம், மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி, Toronto நகர முதல்வர் Olivia Chow, நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள், கல்விச் சபை உறுப்பினர்களான நீதன் ஷான், அனு ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்த தமிழ்ச் சமூக மைய குழு, இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

Related posts

உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

Lankathas Pathmanathan

எரிபொருளின் விலை மேலும் உயரலாம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment