தேசியம்
செய்திகள்

இளையோர் மத்தியிலான வன்முறைகள் அதிகரிப்பு: Toronto காவல்துறை

Toronto-வில் இளையோர் மத்தியிலான வன்முறைகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் மாநாட்டில், Toronto காவல்துறை தலைவர் Myron Demkiw இந்த விடயம் குறித்து கவலை தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் வயதினர் மத்தியில் நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத ஆயுதங்களுடன் கைது செய்யப்படும் இளைஞர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பை அவர் சுட்டிக்காட்டினார்.

2025-ஆம் ஆண்டில் கொலை விசாரணைகளுக்காக பல இளைஞர்கள் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் நடந்த பல நிகழ்வுகளில் இளையோர் மத்தியிலான வன்முறைககளின் அதிகரிப்பு தொடர்பாக Myron Demkiw பேசினார்.

இளம் வயதினர் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபடுவதை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாது  என அவர் திங்கட்கிழமை (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூறினார்

Related posts

கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் பேச்சுக்களில் ஈடுபடுவோம்: CUPE

Lankathas Pathmanathan

 Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment