தேசியம்
செய்திகள்

உக்ரைனின் மறுசீரமைப்புக்கான கனடாவின் புதிய சிறப்பு பிரதிநிதியாக Chrystia Freeland நியமனம்

உக்ரைனின் மறுசீரமைப்புக்கான கனடாவின் புதிய சிறப்பு பிரதிநிதியாக Chrystia Freeland நியமிக்கப்படுகிறார்.

பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை செவ்வாய்க்கிழமை (16) அறிவித்தார்.

Chrystia Freeland-டின் பன்முகத்தன்மை, நுண்ணறிவு, கொள்கை ரீதியான தலைமைத்துவம் குறித்து பிரதமர் தனது அறிவித்தலில் பாராட்டினார்.

Chrystia Freeland பிரதமருடன் நேரடியாகப் பணியாற்றுவார் எனவும், உக்ரேனியப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் உக்ரேனியத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும்போக்குவரத்து, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் Chrystia Freeland அறிவித்தார்.

“மிகுந்த நன்றியுணர்வுடனும், சோகத்துடனும்” தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அடுத்த தேர்தல் வரை நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கும் முடிவையும் அவர் அறிவித்தார்.

2015-ஆம் ஆண்டு Liberals கட்சி ஆட்சியமைத்ததிலிருந்து Toronto நகர நாடாளுமன்ற உறுப்பினரான Chrystia Freeland முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் Justin Trudeau அரசில் துணைப் பிரதமராக பணியாற்றிய அவர், 2020-ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர் இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவர் திடீரென நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகியது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

அவரது பதவி விலகல் Justin Trudeau பதவி விலக வேண்டிய அழுத்தத்தை அதிகரித்தது.

இதன் பின்னணியில் நிகழ்ந்த கட்சி தலைமை போட்டியில் Chrystia Freeland ஈடுபட்டு Mark Carney-யிடம் தோல்வியடைந்தார்.

Chrystia Freeland கடந்த வாரம் உக்ரைனுக்கு பயணம் செய்திருந்தார்.

இந்தப் பயணத்தின் போது உக்ரைனுக்கான கனடிய தூதர் Natalka Cmoc, முன்னாள் கனடிய பிரதமர் Jean Chretien, முன்னாள் Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey ஆகியோரும் உடனிருந்தனர்.

உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த Chrystia Freeland, பத்திரிகையாளராக இரண்டு தசாப்தங்களாக உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COPA அமெரிக்கா: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கனடா தோல்வி

Lankathas Pathmanathan

Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Liberal அமைச்சரவை இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment