தேசியம்
செய்திகள்

விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிக்கும் Air கனடா

விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிப்பதாக Air கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.

வார இறுதியில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக விமான சேவைகளை இரத்து செய்ய Air கனடா முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் வார இறுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடும் என்பதால், வியாழக்கிழமை (14) முதல் விமான சேவைகளை இரத்து செய்ய ஆரம்பிப்பதாக Air கனடா தெரிவித்துள்ளது.

வியாழன் முதல் படிப்படியாக விமான சேவைகளை நிறுத்த ஆரம்பித்து, வார இறுதிக்குள் Air கனடா, Air கனடா Rouge விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் என கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் தெரிவிக்கிறது.

இதனால் நாளாந்தம் 130,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

அமெரிக்க மேல்சபை குழு கனடாவில் சந்திப்பு?

Lankathas Pathmanathan

2026 FIFA உலகக் கோப்பை தொடரில் B பிரிவில் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment