தேசியம்
செய்திகள்

கனடிய இறக்குமதிகளுக்கான வரியை அதிகரிக்கும் உத்தரவில் Donald Trump கையெழுத்து

கனடிய இறக்குமதிகளுக்கான வரியை 35 சதவீதமாக அதிகரிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வியாழக்கிழமை (31)  கையெழுத்திட்டார்.

அமெரிக்கா-Mexico-கனடா வர்த்தக ஒப்பந்தத்தில் அடங்காத அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Fentanyl கடத்தலைத் தடுக்க கனடா தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்ற Donald Trump அரசின் தொடர் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக இந்த புதிய வரி அறிவித்தல் வெளியானது.

Donald Trump ஆட்சியேற்றத்தன் பின்னர் ஆரம்பித்த tariffs கட்டண எச்சரிக்கையின் சமீபத்திய அத்தியாயமாக இந்த அறிவித்தல் அமைகிறது.

August மாதம் 1-ஆம் திகதிக்குள் கனடா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டாவிட்டால் 35 சதவீத வரிகளை விதிக்கவுக்கவுள்ளதாக Donald Trump கடந்த சில வாரங்களாக எச்சரித்து வருகிறார்.

கனடா தனது அனைத்து ஏற்றுமதிகளில் சுமார் 75 சதவீதத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

Related posts

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Lankathas Pathmanathan

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வாகனம் மோதியதில் ஒரு குழந்தை மரணம் – ஒன்பது பேர் வரை காயம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தொடர்ந்து தவிர்க்கும் கனடியர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment