தேசியம்
செய்திகள்

பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆதரிக்கும் கனடாவின் முடிவுக்கு அமெரிக்கா கண்டனம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக ஆதரிக்கும் கனடாவின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விமர்சித்துள்ளார்.
கனடாவின் இந்த முடிவு, கனடா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
September மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக கனடிய பிரதமர் Mark Carney புதன்கிழமை (30) அறிவித்தார்.
கனடாவின் இந்த முடிவு, அமெரிக்கா கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதை கடினமாக்கி உள்ளது என Donald Trump  கூறியுள்ளார்.
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்த August 1  காலக்கெடுவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த கருத்து வெளியானது.
அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் August 1-ஆம் திகதி காலக்கெடுவுக்குள் முடிவடையாத நிலை ஏற்படலாம் என பிரதமர் Mark Carney புதன்கிழமை தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது: முன்னாள் Liberal அமைச்சர்

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan

Leave a Comment