September 15, 2026
தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் வீழ்ச்சி!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைவடைந்தது.

June மாதத்துக்கான வேலையற்றோர் விகிதம் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.

June மாதம் 83,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக  புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தது.

இதில் பெரும்பாலானவை பகுதி நேர வேலைவாய்ப்புகள் எனவும், தனியார் துறையில் 47,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாய்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

June மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 7.1 சதவீதமாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த ஆண்டு January மாதத்திற்கு பின்னர் May மாதம் குறிப்பிடத்தக்க வேலை அதிகரிப்பு பதிவானது.

தொடர்ந்து மூன்று மாதங்களாக வேலையற்றோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை May மாதம் முறியடித்தது.

July 30-ஆம் திகதி கனடிய மத்திய வங்கி அதன் அடுத்த வட்டி விகித முடிவை அறிவிக்க தயாராகும் நிலையில் இந்த வேலையற்றோர் விகித அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Related posts

எரிபொருள் விலை குறைவு நீடிக்கும் என கனடியர்கள் எதிர்பார்க்கலாமா?

Lankathas Pathmanathan

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் விரைவு சோதனை திட்டம் அறிமுகம்!

Gaya Raja

Leave a Comment