தேசியம்
செய்திகள்

புதிய NDP தலைவர் March மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்?

எதிர்வரும் March மாதம் புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
புதிய தலைமைக்கான  ஏழு மாத போட்டியின் பின்னர் புதிய தலைவர் தெரிவாகவுள்ளார்.
NDP கட்சியின் வரலாற்றில் மிக மோசமான தேர்தல் முடிவுக்குப் பின்னர் இந்த தலைமைப் போட்டி நடைபெறவுள்ளது.
NDP வியாழக்கிழமை (10) இந்த அறிவித்தலை வெளியிட்டது.
புதிய ஜனநாயகக் கட்சியினர் ஒன்று சேர்வதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாக இது அமையும் என NDP நம்பிக்கை தெரிவித்தது.
புதிய தலைவருக்கான பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக September மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு March 29 ஆம் திகதி நடைபெறும்.
கடந்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலை NDP, 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கொண்டது .
ஆனாலும் இந்த தேர்தலில் ஏழு ஆசனங்களை மாத்திரம் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் முன்னாள் NDP தலைவர் Jagmeet Singh தனது சொந்த தொகுதியில் வெற்றி பெறத் தவறியதால், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
NDP கட்சி தனது 2026 கட்சி மாநாட்டை March மாதம் Winnipeg-கில் நடத்துகிறது.

Related posts

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Munich பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் Mark Carney

Lankathas Pathmanathan

Paris Paralympics: Tokyo Paralympics போட்டியை விட அதிகம் பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment