முன்னாள் அமைச்சர் John McCallum தனது 75-ஆவது வயதில் காலமானார்.
முன்னாள் அமைச்சரும், Ontario மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் Markham தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான John McCallum காலமானார்.
John McCallum தனது 75-ஆவது வயதில் காலமானார் என ஞாயிற்றுக்கிழமை (22) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவரது குடும்பத்தினரின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அவர் June 21, 2025 அன்று குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக காலமானார் என தெரிவிக்கப்படுகிறது.
John McCallum, 2000 முதல் 2015 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், குடியேற்றம், பாதுகாப்பு, தேசிய வருவாய் உள்ளிட்ட பல்வேறு அமைச்சரவை பதவிகளிலும் பணியாற்றினார்.
அவர் 2017 முதல் 2019 வரை சீனாவுக்கான கனடாவின் தூதராகவும் பணியாற்றினார்.
பிரதமர் Mark Carney, முன்னாள் பிரதமர் Justin Trudeau, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், முன்னாள் Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey, Markham நகர முதல்வர் Frank Scarpitti, Markham-Stouffville தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Helena Jaczek, Pickering-Brooklin நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனித்தா நாதன் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு இரக்கம் தெரிவித்து வருகின்றனர்.
