தேசியம்
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Conservative கட்சியின் Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek தனது பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

Conservative தலைவர் Pierre Poilievre இடைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் Damien Kurek செவ்வாய்க்கிழமை  (17) பதவி விலகினார்.

இந்த நிலையில் Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதியில் அறிவிக்கப்படும் இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட Damien Kurek பதவி விலகுவார் என Conservative கட்சி அறிவித்தது.

இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடுவதை இலகுவாக்கும் வகையில் விரைவில்” ஒரு தேர்தலை அறிவிக்க தயாராக இருப்பதாக பிரதமர் Mark Carney ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த இடைத்தேர்தல் August மாதம்  நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Related posts

August இறுதி வரை கனடா ஒவ்வொரு வாரமும் இரண்டு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment