தேசியம்
செய்திகள்

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வெற்றி உறுதி!

Ontario மாகாணத்தின் Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வேட்பாளரின் வெற்றி மறு வாக்கு எண்ணிக்கையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

Conservative வேட்பாளர் Kathy Borrelli நான்கு வாக்குகளால் வெற்றி பெற்றது மறுவாக்கு எண்ணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

மறு வாக்கு எண்ணிக்கையின் பின்னர் நான்கு வாக்குகளால் Kathy Borrelli வெற்றி பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது.

Liberal கட்சி இந்த வாக்கு மறு எண்ணிக்கைக்கு அழைப்பு விடுத்தது.

தேர்தலுக்குப் பின்னர் முதலில் தேர்தல் முடிவுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில், Liberal வேட்பாளர் Irek Kusmierczyk 77 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த மறுவாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமாகி, வெள்ளிக்கிழமை  (23) காலை இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த முடிவு நாடாளுமன்றத்தில் கட்சிகளின் ஆசன எண்ணிக்கையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான ஆசனங்கள் எண்ணிக்கைக்கு  இரண்டு ஆசனங்கள் குறைவான நிலை உள்ளது.

Liberal கட்சி 170, Conservative 143, Bloc Quebecois 22,  NDP 7, பசுமை கட்சி ஒன்று என நாடாளுமன்றத்தில் ஆசனங்களை கொண்டுள்ளது.

Newfoundland and Labrador மாகாணத்தின்  Terra Nova-The Peninsulas தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளும் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றன.

தேர்தல் தினமன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், Liberal கட்சி 12 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan

$30 மில்லியன் மதிப்பிலான தனியார் விமானத்தை கொள்வனவு செய்தது Ontario அரசு?

Lankathas Pathmanathan

Leave a Comment