தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலையை மறுபவர்களுக்கு கனடாவில் இடமில்லை: Patrick Brown

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என Brampton நகர முதல்வர் Patrick Brown தெரிவித்தார்.

Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய Brampton நகர முதல்வர் Patrick Brown, கனடாவில் தமிழின அழிப்பு நினைவகத்தை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களுக்கு Brampton  நகரில் இடமில்லை – கனடாவில் இடமில்லை அவர்கள் கொழும்பிற்கு திரும்பி செல்லலாம் எனவும் Patrick Brown தனது உரையில் குறிப்பிட்டார்.

Related posts

கனேடிய உதவிப் பணியாளர் உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் பலி

Lankathas Pathmanathan

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்குப் பயணம்  மேற்கொண்டால் கைது செய்யப்படுவார்: Mark Carney

Lankathas Pathmanathan

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment