தேசியம்
செய்திகள்

பதவி விலகினார் பசுமைக் கட்சியின் இணைத் தலைவர்!

பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் Jonathan Pedneault பதவி விலகினார்.

கட்சியின் இணைத் தலைவரான Jonathan Pedneault புதன்கிழமை (30) கட்சியின் தலைமையில் இருந்து விலகினார்.

தனது பதவி விலகல் அறிக்கையில் கட்சியின் தேர்தல் தோல்விகளுக்கு “பொறுப்பேற்கிறேன்” என அவர் கூறினார்.

எமது நாட்டின் போக்கை மாற்றக்கூடிய வழியில் எங்களால் செயல்பட முடியவில்லை என்பதை உணர்வதாக தெரிவித்த அவர், அதன் பொறுப்பை தான் ஏற்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சமர்ப்பிப்பதாக Jonathan Pedneault தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

நடைபெற்ற தேர்தலில் அவர் Quebec மாகாணத்தின் Outremont தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் அவர் தனது தொகுதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

Liberal வேட்பாளர் Rachel Bandayan ,26,024 வாக்குகளுடன் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

Jonathan Pedneaultமொத்தம் 4,539 வாக்குகள் பெற்றார்.

கடந்த February மாதம் Jonathan Pedneault பசுமைக் கட்சியின் இணைத் தலைவராக Elizabeth May-யுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan

சவாலான நிதி திரட்டும் தடையை தாண்டிய Liberal தலைமை வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan

அடுத்த ஆண்டு 60 சதவீத கனடியர்கள் அதிக அடமானக் கொடுப்பனவுகளை எதிர்கொள்ள நேரிடும்: கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

Leave a Comment