தேசியம்
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

நடைபெற்று முடிந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் 40-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (29) இரவு கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஒன்பது வேட்பாளர்கள் 500-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

திங்கட்கிழமை (28) நடைபெற்ற பொதுத் தேர்தலில் Liberal 169, Conservative 144, Bloc Québécois 22, NDP 7, பசுமை 1 என ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளன.

Newfoundland மாகாணத்தின் Terra Nova-The Peninsulas தொகுதியில் Liberal வேட்பாளர் Anthony Germain தனது போட்டியாளர் Jonathan Rowe-வை 12 வாக்குகளால் வெற்றி பெற்றார்.

Quebec மாகாணத்தின் Terrebonne தொகுதியில் Liberal வேட்பாளர் Tatiana Auguste தனது போட்டியாளர் Nathalie Sinclair-Desgagné-வை 35 வாக்குகளால் வெற்றி பெற்றார்.

Nunavut தொகுதியில் NDP வேட்பாளர் Lori Idlout தனது போட்டியாளர் Kilikvak Kabloon-வை 77 வாக்குகளால் வெற்றி பெற்றார்.

தவிரவும் Ontario மாகாணத்தின் Windsor-Tecumseh-Lakeshore, Milton East-Halton Hills South, Brampton Centre, Kitchener Centre, British Colombia மாகாணத்தின் Vancouver Kingsway, Newfoundland மாகாணத்தின் Miramichi-Grand Lake தொகுதிகளில் வேட்பாளர்கள் 400-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இறுதி வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படுவதால் முடிவுகள் மாறக்கூடும் என்பதும் இவற்றில் சில தொகுதிகளில்  நீதிமன்ற மறுவாக்கு எண்ணிக்கை நிகழலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaya Raja

உலகளாவிய செல்வப் பட்டியலில் கனடாவுக்கு என்ன நிலை?

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!

Gaya Raja

Leave a Comment