September 27, 2026
தேசியம்
செய்திகள்

Andrea Horwath அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

Hamilton நகர முதல்வர் Andrea Horwath ஒரு விபத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சைக்காக Andrea Horwath வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது அலுவலகம் புதன்கிழமை (30) உறுதிப்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை  (29) வீசிய கடுமையான காற்றின் போது அவர் Hamilton நகரசபை மண்டபத்திற்கு வெளியே படிக்கட்டுகளில் விழுந்தார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடைந்த மணிக்கட்டு தவிர, முழங்கை எலும்பு முறிவு, காலில் ஏற்பட்ட காயத்திற்கும் அவர் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

மருத்துவர்களின் ஆலோசனையைப் பொறுத்து, Andrea Horwath ஓய்வெடுக்கவும் குணமடையவும் “குறுகிய மருத்துவ விடுப்பு” எடுக்கலாம் எனவும் அவரது அலுவலகம் தெரிவித்தது

ஒரு மணி நேரத்திற்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், Toronto பெரும்பாகம், Hamilton பகுதிக்கு சுற்றுச்சூழல் கனடா செவ்வாய்க்கிழமை வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Lankathas Pathmanathan

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja

Rainbow பால வாகன வெடிப்பு சம்பவத்துடன் பயங்கரவாதம் தொடர்பு பட்டடத்திற்கான ஆதாரம் இல்லை: கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment