தேசியம்
செய்திகள்

முன்கூட்டிய வாக்கெடுப்பில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் வாக்குப்பதிவு

பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்கெடுப்பில் முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் இம்முறை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இம்முறை முன்கூட்டிய  வாக்கெடுப்பில் 7.3 மில்லியன் கனடியர்கள் வாக்களித்தனர் என கனடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

2021 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முன் கூட்டிய வாக்கெடுப்பில் வாக்களித்த 5.8 மில்லியனை விட இது அதிகமானதாகும்.

இது 2021 பொதுத் தேர்தலின் போது முன்கூட்டியே வாக்களித்தவர்களிடமிருந்து 25 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.

இம்முறை முன்கூட்டிய வாக்கெடுப்பின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (18) மாத்திரம் 2 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் காட்டின.

பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு கடந்த நீண்ட வார விடுமுறை முழுவதும் நடைபெற்றது.

தேர்தல் வாக்களிப்பு April 28 நடைபெற உள்ள நிலையில் இம்முறை முன்கூட்டிய வாக்களிப்புக்கு நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டது.

முன்கூட்டிய வாக்களிப்புக்காக இம்முறை April 18 முதல் April 21 வரை, நாளாந்தம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (18) 2,054,525 பேரும், சனி (19), ஞாயிறுகிழமைகளில் (20) முறையே 659,952, 1,466,225 பேரும் முன்கூட்டிய வாக்கெடுப்பில் இம்முறை வாக்களித்துள்ளனர்.

முன்கூட்டிய வாக்கெடுப்பின் இறுதி நாளான திங்கட்கிழமை (21)  மொத்தம் 2,100,273 வாக்குகள் பதிவாகியுள்ளன.

Yukon-னைத் தவிர ஒவ்வொரு மாகாணத்திலும், பிராந்தியத்திலும் 2021 ஆம் ஆண்டை விட முன்கூட்டிய வாக்கெடுப்பில் அதிகரித்த வாக்குப்பதிவு இம்முறை நிகழ்ந்தது.

Ontario, Quebec, British Columbia மாகாணங்களில் இம்முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

Ontario-வில் 2,792,881, Quebec-கில் 1,595,591 British Columbia-வில் 1,104,151 வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த தேர்தலில், 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர்

2021 தேர்தலில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு 62.6 சதவீதமாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்களிப்புக்கு திங்களன்று (28) வாக்குசாவடிகள் 12 மணிநேரம் திறந்திருக்கும்.

Related posts

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Lankathas Pathmanathan

பணவீக்க சரிவு கனடியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்: நிதியமைச்சர்

Lankathas Pathmanathan

David Johnston பணியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளோம்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment