தேசியம்
செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

புதிய COVID கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை Ontario மாகாண அரசாங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிடவுள்ளது.

கட்டுப்பாடுகள் குறித்த ஒரு அறிவிப்பை தனது அரசாங்கம் இன்று வெளியிடும் என Ontario மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்தார். தொற்றின் தாக்கம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

தற்போது Ontarioவில் 421 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே Ontarioவில் ஒரே நேரத்தில் அதிக அளவில் தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாகும்.

Ontarioவில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஏற்கனவே முதல்வர் Doug Ford தெரிவித்திருந்தார். குறிப்பாக வரவிருக்கும் Easter விடுமுறை நீண்ட வார இறுதியில் ஒன்றுகூடல்களைத் தவிர்க்குமாறு முதல்வர் கோரியிருந்தார்.

Ontarioவில் நேற்று புதன்கிழமை தொடர்ந்தும் ஏழாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan

தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை: Trudeau

Gaya Raja

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

Leave a Comment