தேசியம்
செய்திகள்

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

COVID தொற்றின் தீவிரம் காரணமாக Quebecகின் மூன்று நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன.

நேற்று புதன்கிழமை மாகாண முதல்வர் François Legault இந்த அறிவித்தலை விடுத்தார். Quebec City, Lévis, Gatineau ஆகிய நகரங்கள் இந்த சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. இந்த கட்டுப்பாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 10 தினங்கள் நீடிக்கவுள்ளது. இதன் மூலம் பாடசாலைகளும், அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களும் மூடப்படவுள்ளன. மாணவர்கள் முழுநேரமாக இணையக் கல்வியை தொடரவுள்ளனர்.

அதேவேளை Quebecஇன் நான்கு பிராந்தியங்கள் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் செல்லவுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை முதல்வர் தெரிவித்தார். அண்மையில் COVID கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட Outaouais, Quebec City, Chaudière-Appalaches, Bas-St-Laurent ஆகிய பகுதிகளே தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் செல்கின்றன. இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.

Related posts

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணையை தலைமை தாங்க நீதிபதி நியமனம் ?

Lankathas Pathmanathan

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

Leave a Comment