தேசியம்
செய்திகள்

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை.

தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க மத்திய வங்கி புதன்கிழமை (16) தீர்மானித்தது.

தெற்கில் இருந்து தொடரும் வர்த்தக சீர்குலைவு இந்த முடிவின் தெளிவான மையமாக இருந்தது என கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem தெளிவுபடுத்தினார்.

கடந்த வருடம் June மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏழு வட்டி விகித குறிப்புக்களைத் தொடர்ந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் தொடர் வரி விதிப்பினால் கனடாவில் பொருளாதார தளம்பல் நிலை காணப்படுவதாகவும் மத்திய வங்கி அறிவித்தது.

அமெரிக்காவுடன் தொடரும் வரி விதிப்புகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை எவ்வாறு வழிநடத்துவது என்பது குறித்து தெளிவான நிலை இல்லை எனவும் மத்திய வங்கி தெரிவித்தது.

Related posts

2024 Paris Olympics: ஒன்பதாவது பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா!

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களுக்கான பணி கட்டு்ப்பாட்டை விலத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment