தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்

கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமிக்கப்பட்டார்.
கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக Pete Hoekstra நியமிக்கப்பட்டார்.
முன்னாள் Michigan காங்கிரஸ் உறுப்பினரான இவரை கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அமெரிக்க மேல் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்துக்கான முன்னாள் அமெரிக்க தூதரான இவரை கனடாவுக்கான தூதராக அமெரிக்க மேல்சபை புதன்கிழமை (09) உறுதிப்படுத்தியது.
அமெரிக்க-கனடிய உறவுகளில் ஒரு நெருக்கடியான காலத்தில் கனடாவில் இயங்கும் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக Pete Hoekstra செயல்படவுள்ளார்.
கனடா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாற வேண்டும் என Donald Trump பலமுறை கூறி வருகிறார்.
ஆனாலும் கனடா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என Pete Hoekstra தனது பதவி உறுதிப்படுத்தல் நிகழ்வில் கூறினார்.
கனடா அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தக பங்காளி எனவும், அதன் வெளிநாட்டு முதலீடு, எரிசக்தி இறக்குமதியின மிகப்பெரிய ஆதாரம் எனவும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்வதிலும், எல்லைகளை பாதுகாப்பதிலும், fentanyl அச்சுறுத்தலை எதிர்கொள்வதிலும், தேசிய பாதுகாப்பிலும் கனடிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என Pete Hoekstra கூறினார்.

Related posts

மூன்றாவது World Series பட்டத்தை வெற்றி பெறுமா Blue Jays?

Lankathas Pathmanathan

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment