நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் Carleton தொகுதியில் 91 வேட்பாளர்களை Conservative தலைவர் Pierre Poilievre எதிர்கொள்கிறார்.
இது ஒரு பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டில் மிக அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களை கொண்ட தொகுதி என்ற சாதனையை சமன் செய்கிறது.
இதில் 85 வேட்பாளர்கள் தேர்தல் சீர்திருத்தக் குழுவான நீண்ட வாக்கு சீட்டு குழு (Longest Ballot Committee) என அழைக்கப்படும் ஒரு போராட்டக் குழுவுடன் தொடர்புடையவர்கள்.
இந்தக் குழு அண்மைய காலத்தில் முக்கிய இடைத் தேர்தல்களில் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.
இம்முறை Carleton தொகுதியில் ஏனைய பிரதான கட்சி வேட்பாளர்களை தவிர இந்த சுயேச்சை வேட்பாளர்கள் Pierre Poilievre-க்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதி வாக்குச்சீட்டில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையால் உருவாக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் ஏற்படலாம் என தேர்தல்கள் திணைக்களம் கூறுகிறது.
Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre 2004-ஆம் ஆண்டு முதல் Carleton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
அவர் இந்தத் தொகுதியில் போட்டியிடும் எட்டாவது தேர்தல் இதுவாகும்.
அதேவேளை Liberal கட்சித் தலைவர் Mark Carney முதல் தடவையாக Nepean தொகுதியில் நான்கு போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிடுகிறார்.
நாடளாவிய ரீதியில் வேட்பாளர்கள் திங்கட்கிழமை (07) பிற்பகல் 2 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
