இந்தியா-கனடா இடையேயான பதற்றத்தால் மனமுடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் Stephen Harper தெரிவித்துள்ளார்.
கனடா ஏன் இந்தியாவுடன் இத்தகைய மோசமான உறவைக் கொண்டுள்ளது என்பதை “முழுமையாக” புரிந்து கொள்ள முடியவில்லை என கடந்த மாதம் இந்தியாவில் ஒரு மாநாட்டில் உரையாற்றிய Stephen Harper கூறினார்.
இந்தியாவிலிருந்து ஒரு தனி மாநிலத்தை உருவாக்க விரும்பும் சீக்கிய ஆர்வலர்களால் Liberal கட்சி ஊடுருவ பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Vancouver அருகே ஒரு சீக்கிய தலைவர் கொலையில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களை இணைக்கும் “நம்பகமான குற்றச்சாட்டுகள்” தனது அரசாங்கத்திடம் இருப்பதாக முன்னாள் பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார் .
2023 இலையுதிர் காலம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் உறை நிலையில் உள்ளன.
ஒரு வருடத்தின் பின்னர், படுகொலைகளின் பின்னணியில் புது டில்லி இருப்பதாக RCMP குற்றஞ்சாட்டியதை அடுத்து கனடிய அரசாங்கம் ஆறு இந்திய இராஜதந்திரிகளை வெளியேற்றியது.
இந்த விடயத்தில் “குற்றச்சாட்டுகளை மதிப்பீடு செய்யும் நிலையில் நான் நிச்சயமாக இல்லை” என Stephen Harper தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான கனடாவின் உறவுகளுக்கு “தீங்கு விளைவிக்கும் காலிஸ்தானை ஆதரிக்கும் ” சிறுபான்மையினர்” குறித்து Liberal அரசாங்கத்தை விட தனது அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
