September 10, 2026
தேசியம்
செய்திகள்

பிரதான கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு சமநிலையில் உள்ளது?

அடுத்த பொதுத் தேர்தல் முடிவுகளில் நிலையற்ற சாத்தியக்கூறுகளை அண்மைய கருத்து கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு April 28-ஆம் திகதி அல்லது May 5-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவித்தலை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (23) வெளியிடுவார் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் இரண்டு பிரதான  கட்சிகளுக்கு  இடையிலான மக்கள் ஆதரவு சமநிலையில் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Justin Trudeau-வின் பதவி விலகல், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் பதவியேற்பின் பின்னர், பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சி Atlantic, Ontario ,British Columbia உள்ளிட்ட பல பிராந்தியங்களில் தனது ஆதரவு தளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

இறுதியாக வெளியான கருத்து கணிப்பு Conservative கட்சிக்கு 35 சதவீதமும், Liberal கட்சிக்கு 34 சதவீதமும் மக்கள் ஆதரவு உள்ளதை சுட்டிக்  காட்டுகிறது.

இதற்கிடையில், புதிய ஜனநாயகக் கட்சி 16 சதவீத ஆதரவு நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில் ஏனைய தேர்தல் பிரச்சாரங்களை விட இம்முறை பிரச்சார களம் கொந்தளிப்பானதாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: ஆறாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

கனடாவிலிருந்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment