நடைபெற்று முடிந்த Ontario மாகாண சபைத் தேர்தலில் 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
தகுதி பெற்ற Ontario வாக்காளர்களில் சுமார் 45 சதவீதத்தினர் இந்தத் தேர்தலில் வாக்களித்ததாக ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த தேர்தலை விட ஒரு சதவீதம் அதிக வாக்கு பதிவாகும்.
வியாழக்கிழமை (27) நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 11 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களில் 5 மில்லியனுக்கும் சற்று அதிகமானவர்கள் வாக்களித்தனர்.
இது தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் 45.4 சதவீதமாகும்.
2022 இல் நடந்த மாகாண சபைத் தேர்தலில், மாகாண தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு நிகழ்ந்தது.
இந்தத் தேர்தலில் 44 சதவீதம் வாக்கு பதிவானது
June 2, 2022 அன்று நடைபெற்ற தேர்தலில் 10.7 மில்லியன் தகுதியான வாக்காளர்களில் சுமார் 4.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தேர்வு செய்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
