4 Nations Face-Off தொடரின் இறுதி hockey ஆட்டத்தில் கனடா அமெரிக்காவை வெற்றி கொண்டது.
4 Nations Face-Off வெற்றிக்கிண்ண இறுதி ஆட்டம் வியாழக்கிழமை (20) நடைபெற்றது.
3 க்கு 2 என்ற goal கணக்கில் இந்த ஆட்டத்தில் கனடா வெற்றி பெற்றது.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லை தாண்டிய அரசியல் பகைமைக்கு மத்தியில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றது.
இந்தத் தொடர் 2026 ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு முன்னோடி ஆட்டமாக இருந்தது.