Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் Mark Carneyக்கு ஆதரவு தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி முடிவு செய்துள்ளார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் Mark Carney தனது பெயரையும் இணைத்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் கனடிய மத்திய வங்கி, இங்கிலாந்தின் மத்திய வங்கியின் ஆளுநரான இவருக்கு ஆதரவு தெரிவிக்க அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி முடிவு செய்துள்ளார்.
Pierre Poilievreரை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கான தொலைநோக்கு, அனுபவம், தலைமைத்துவம் Mark Carneyக்கு உள்ளது என தனது ஆதரவு அறிக்கையில் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.