தேசியம்
செய்திகள்

Liberal தலைமைக்கு போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Frank Baylis அறிவித்துள்ளார்.

Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் Frank Baylis தனது பெயரையும் இணைத்துள்ளார்.

Québec மாகாணத்தின் Pierrefonds-Dollard தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், இந்த தலைமை போட்டியில் தனது பெயரை அறிவித்த முதலாவது வேட்பாளராவார்.

Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.

Liberal கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது: Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment