தேசியம்
செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகும் பிரதமர்

கனடிய பிரதமர் தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகிறார்.

பிரதமர் Justin Trudeau இந்த வாரம் Laos பயணமாகிறார் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.

தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு கனடிய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் வன்முறை தென்கிழக்கு ஆசியாவில் பொதுக் கருத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்த பயணம் அமைகிறது

October 10-11 நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations- ASEAN ) உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியத்தில் வர்த்தக, அரசியல் உறவுகளை முன்னேற்றுவதற்கு இந்த பயணத்தை பிரதமர் உபயோகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தின் பின்னர், Justin Trudeau Germanyயில் உள்ள அமெரிக்க விமானத் தளத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு உதவியை உறுதிப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி Joe Biden ஏற்பாடு செய்துள்ள சந்திப்பில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan

அமெரிக்கா உலக வர்த்தகத்தை வழி நடத்தவில்லை என்றால், கனடா அதை செய்யும்: Mark Carney

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment