தேசியம்
செய்திகள்

சனிக்கிழமை கைவிடப்படும் அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளும்

கனடாவிற்குள் நுழையும் அனைவருக்குமான அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளையும் கைவிடுவதாக மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை (26) அறிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்டாய தடுப்பூசி விதிமுறைகள், கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறைகள், விமானங்கள், தொடரூந்துகளில் அமுலில் உள்ள கட்டாய முகக்கவச விதிகளும் அகற்றப்படவுள்ளன.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra உட்பட அமைச்சர்கள் பலரும் திங்கள் காலை Ottawaவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டனர்

இந்த அறிவித்தல் கனடாவின் COVID தொற்று பதில் நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.

Related posts

Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமித்தார் பிரதமர்

Lankathas Pathmanathan

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளது: Theresa Tam 

Gaya Raja

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment