தேசியம்
செய்திகள்

காணாமல் போன மூன்று வயது Mississauga சிறுவன் சடலமாக மீட்பு

காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

Ontario மாகாணத்தில் Mississauga நகர பூங்கா ஒன்றில் இந்த மூன்று வயது சிறுவன் காணாமல் போனதாக வியாழக்கிழமை (25) காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது.

இந்த சிறுவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் வெள்ளிக்கிழமை (26)மீட்கப்பட்டது.

Erindale பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு சிற்றோடையில் Zaid Abdullah வெள்ளி மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை என Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை பிரேத பரிசோதனையாளர் தீர்மானிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பதவி விலகினார் Alberta முதல்வர் Jason Kenney

Lankathas Pathmanathan

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை தோன்றலாம்?

Lankathas Pathmanathan

Leave a Comment