தேசியம்
செய்திகள்

மூன்று மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை!

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணங்களில் சில பகுதிகளில் இந்த வாரம் வெப்பநிலை 45 C வரை உணரப்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontario முழுவதும், வெப்பநிலை 35 C வரை உணரப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதத்துடன், Toronto போன்ற பகுதிகளில் வெப்பநிலை 45 C வரை உணரப்படுகிறது.

London முதல் Ottawa வரையிலான பகுதியில் திங்கட்கிழமை (17) முதல் சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டது.

இந்த எச்சரிக்கை Sault Ste. Marie முதல் வடக்கே Fort Albany வரை நீள்கிறது.

கடுமையான வெப்பநிலை வாரத்தின் பிற்பகுதியில் கிழக்கு நோக்கி நகரும் என சுற்றுச்சூழல் கனடா கூறுகிறது.

தெற்கு Quebecகின் பெரும்பகுதிக்கு புதன்கிழமை (19) முதல் சிறப்பு வானிலை அறிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது

New Brunswickகில், செவ்வாய்(18) , புதன் (19) கிழமைகள் வெப்பமான நாட்களாக கணிக்கப்பட்டுள்ளன.

Related posts

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Leave a Comment