September 6, 2026
தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என Liberal அரசாங்கம் தெரிவிக்கிறது.

ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார்.

வெளிநாட்டு தலையீடு விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆதரிக்கிறது என அவர் கூறினார்.

அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்

இந்த வகையில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் Bloc Québécois பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என Dominic LeBlanc கூறினார்.

Related posts

IIHF ஆண்கள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடிய அணி

Lankathas Pathmanathan

புதிய ஆண்டின் முதலாவது வட்டி விகித அறிவித்தல் 28-ஆம் திகதி

Lankathas Pathmanathan

முன்னாள் உலக Junior hockey வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தாமதம் குறித்து காவல்துறை மன்னிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment