September 2, 2026
தேசியம்
செய்திகள்

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

British Colombia மாகாண தொடர் கொலையாளி Robert Pickton கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Robert Pickton ஞாயிற்றுக்கிழமை (19) Quebec சிறையில் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார்.

74 வயதான அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

ஆனால் அவரது காயங்களின் தன்மை அல்லது தீவிரம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

மாலை 5:15 மணியளவில் சிறைக்குள் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் Robert Pickton கடுமையான காயங்களுக்கு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவரை தாக்கிய 51 வயதான சந்தேக நபர் தொடர்ந்து இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் அதிகாரிகள் கூறினர்.

Related posts

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  அஞ்சலி அப்பாதுரை

Gaya Raja

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தமிழர்

Lankathas Pathmanathan

காணி அபகரிப்பு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கனடாவிடம் வலியுயுறுத்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment