தேசியம்
செய்திகள்

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி வலியுறுத்துகின்றது.

தொடர் கொலையாளி Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் Marco Mendicino பொய் கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டுகின்றார்.

ஆனாலும் இந்த பதவி விலகல் கோரிக்கையை Marco Mendicino நிராகரித்தார்.

Paul Bernardoவை Ontarioவில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையிலிருந்து Quebec கில் உள்ள நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றும் முடிவு அமைச்சரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக கனடியச் சிறைச்சாலை முகவம் கூறுகிறது.

உயர்மட்ட குற்றவாளிகள் குறித்து அமைச்சரின் அலுவலகத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு செயல்முறை நடைமுறையில் உள்ளதாகவும் கனடியச் சிறைச்சாலை முகவம் தெரிவித்தது.

இந்த இடமாற்றம் குறித்த முடிவு அமைச்சரின் அலுவல ஊழியர்களினால் அமைச்சரிடம் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த விடயத்தை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்காத அவரது அலுவலக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என Pierre Poilievre தெரிவித்தார்.

இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (14) நாடாளுமன்ற அமர்வில் Marco Mendicino கூறினார்.

ஆனாலும் இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் Marco Mendicino பதவி விலகாவிட்டால் பிரதமர் Justin Trudeau அவரை பதவி நீக்க வேண்டும் என Pierre Poilievre வலியுறுத்தினார்.

Paul Bernardo இடமாற்றம் செய்யப்பட்டதை அதிர்ச்சியூட்டும் ஒரு விடயம் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino முன்னர் தெரிவித்திருந்தார்.

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து மறு ஆய்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

கனடா தினத்திற்கு வானவேடிக்கைகள் இரத்து?

Lankathas Pathmanathan

Leave a Comment