தேசியம்
செய்திகள்

கனடாவில் முழு சூரிய கிரகணம்!

கனடாவின் சில பகுதிகளை திங்கட்கிழமை (08) ஒரு  முழு சூரிய கிரகணம் கடக்க உள்ளது.

முழு சூரிய கிரகணம் என்பது மிகவும் அரிதான விடயம் என NASA தெரிவித்துள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, பூமியின் மீது நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது என கனடிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழு சூரிய கிரகணம் (total solar eclipse) என்பது பூமி, சூரியனுடன் சந்திரன் சரியாக இணைவதால், சூரிய ஒளியை முற்றிலும் தடுத்து சிறிது நேரம் இருளில் மூழ்கடிக்கும்.

பகுதி சூரிய கிரகணத்தில் (partial solar eclipse) சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் தடுக்கிறது.

ஆனால் எந்த கிரகணமும் சூரியன் முழுவதுமாக மறைந்திருக்காத போது பகுதி கிரகணமாக ஆரம்பித்து பகுதி கிரகணமாக முடிவடையும்.

திங்கட்கிழமை சூரிய கிரகணத்தின் முழு பாதை Ontario, Quebec, New Brunswick, Prince Edward Island, Nova Scotia, Newfoundland and Labrador வழியாகச் செல்லும்.

இந்த சூரிய கிரகணம் சில பகுதிகளில் மேக மூட்டங்களினால் மூடப்பட்டிருக்கலாம்
என எதிர்வு கூறப்படுகிறது.

ஆனாலும் Quebec,  Atlantic கனடாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில், முழு சூரிய கிரகணத்தின் ஆரம்ப நேரம் (கிழக்கு நேரப்படி – ET) மாலை 3:12 மணி.

இதன் முழுமையின் பாதை மாலை 4:16 மணிக்கு முடிவடைகிறது.

மதியம் 1:40 மணி முதல் பகுதி கிரகணம் மாலை 5:18 மணி வரை தெரியும்.

முழு கிரகணத்தை பார்க்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், சிறப்பு கண்ணாடிகளை அணியுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார கட்டணத்தை குறைக்கும் திட்டம்?

Lankathas Pathmanathan

மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது: Trudeau

Lankathas Pathmanathan

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Leave a Comment