தேசியம்
செய்திகள்

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைகிறது

வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் 2022 இல் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது.

கனடிய புள்ளியியல் திணைக்களம் புதிதாக வெளியிட்ட தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது

தொண்டு நிறுவனங்கள் அதிகரித்த செலவீனங்களை எதிர்கொள்ளும் நிலையில், கனடியர்கள் வழங்கிய நன்கொடைகளின் தொகை குறைவடைகிறது.

பணவீக்கத்தின் மத்தியில் 2022 ஆம் ஆண்டில் குறைவான கனடியர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை வழங்கியுள்ளனர் என புள்ளியியல் திணைக்களம் வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளது.

2022 இல், ஐந்து மில்லியனுக்கும் குறைவான கனடிய வரி தாக்கல் செய்பவர்கள், அல்லது 17.1 சதவீதம் பேர், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதம் உயர்ந்தாலும், முந்தைய ஆண்டை விட நன்கொடை அளிப்பவர்கள் எண்ணிக்கையில் இது 0.3 சதவீதம் குறைவாகும்.

மொத்த நன்கொடை தொகையும் 3.1 சதவீதம் குறைந்து 11.4 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

2016ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக நன்கொடை குறைந்துள்ளது.

மொத்த நன்கொடை தொகை 2021 இல் 11.5 சதவிகிதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் மேலும் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படும்: சுதேசி உறவுகள் அமைச்சர் Marc Miller

Lankathas Pathmanathan

சில விமான சேவைகளை இடைநிறுத்த Air கனடா முடிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment