September 22, 2026
தேசியம்
செய்திகள்

முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

Ontario மாகாண முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Kim Rudd மரணமடைந்தார்.

தெற்கு Ontario தொகுதியான Northumberland-Peterborough தெற்கு தொகுதியை அவர் 2015 முதல் 2019 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கருப்பை புற்று நோயால் Cobourgகில் செவ்வாய்கிழமை (12) அவர் மரணமடைந்ததாக தெரியவருகிறது.

66 வயதான அவர் இயற்கை வளத்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

இவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிரதமர் Justin Trudeau தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இவரது மரணத்திற்கு Liberal கட்சியின் அமைச்சர்கள் பலரும் தமது அஞ்சலியை செலுத்துகின்றனர்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் Kim Rudd, Northumberland மத்திய வர்த்தக சபையின் தலைவராக இருந்தார்.

Related posts

பிரிவினைவாத பொது வாக்கெடுப்பை எதிர்க்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்த NDP

Lankathas Pathmanathan

‘கறுப்பு ஜூலை’ கொடூரம் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது: ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

இந்தியாவில் சிக்கியுள்ள கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

Leave a Comment