தேசியம்
செய்திகள்

Richmond Hill இல்லத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு

Richmond Hill நகரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டனர்.

இவர்களில் ஐந்து மாத குழந்தையும் அடங்குவதாக York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை (February 1) நிகழ்ந்த இந்த சம்பவம் ஒரு குடும்ப வன்முறை என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

உயிரிழந்த இணைய இருவர் 41 வயதுடைய ஆண், 36 வயதுடைய பெண் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்கள் ஒருவர் மற்றவர்களுடன் கொண்ட உறவு நிலை , காவல்துறையால் வெளியிடப்படவில்லை.

பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் மரணத்திற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

Related posts

Quebec கர்தினால் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்

Lankathas Pathmanathan

Portugal விபத்தில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

‘Rolling Thunder’  பேரணி, சுதந்திர தொடரணி trucker போராட்டங்கள் போல் அமையாது: Ottawa காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment