தேசியம்
செய்திகள்

Richmond Hill இல்லத்தில் ஐந்து மாத குழந்தை உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு

Richmond Hill நகரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டனர்.

இவர்களில் ஐந்து மாத குழந்தையும் அடங்குவதாக York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை (February 1) நிகழ்ந்த இந்த சம்பவம் ஒரு குடும்ப வன்முறை என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

உயிரிழந்த இணைய இருவர் 41 வயதுடைய ஆண், 36 வயதுடைய பெண் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள், அவர்கள் ஒருவர் மற்றவர்களுடன் கொண்ட உறவு நிலை , காவல்துறையால் வெளியிடப்படவில்லை.

பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் மரணத்திற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

Related posts

கனடியரின் கொலையுடன் கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு Taiwan பயணம்

Toronto – Montreal விமான சேவைகளை நிறுத்தும் WestJet

Lankathas Pathmanathan

Leave a Comment