தேசியம்
செய்திகள்

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் 40 மில்லியனை தாண்டியது.

இது எதிர்வரும் தசாப்தங்களில் மில்லியன் கணக்கான மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்பார்க்கும் கனடாவுக்கு ஒரு புதிய சாதனையை உருவாக்குகிறது.

வெள்ளி பிற்பகல் 3 மணியளவில் 40 மில்லியன் மக்கள் தொகையை கனடா எட்டியது.

2025 ஆம் ஆண்டிற்குள் 500 ஆயிரம் பேரை கனடாவுக்கு வரவழைப்பதற்கான அரசாங்கத்தின் வாக்குறுதியின் ஒரு பகுதியாக புதிய குடியேற்றவாசிகளின் வருகையின் மத்தியில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா G7 நாடுகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

கனடாவின் மக்கள் தொகை 2043 ஆம் ஆண்டளவில் 50 மில்லியனை எட்டும் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related posts

மிகப்பெரிய சரிவை எதிர்கொண்ட கனடிய டொலர்

Lankathas Pathmanathan

தமிழர் நிகழ்வில் கலந்து கொண்ட இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகினர்!  

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment