தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட 119 பேர் கைது

Toronto காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணையில் 556 வாகனங்கள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.

23 வயதான தேஷான் யோகராஜா, 23 வயதான திஷாநாத் சற்குணராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்களில் பெரும்பாலானவர்கள் Toronto பெரும்பாகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இதில் கைதானவர்கள் மீது 314 குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த விசாரணையின் விளைவாக இதுவரை மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 27 மில்லியன் டொலர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

Conservative கட்சியை  விட Liberal கட்சி 3 சதவீதம் முன்னிலையில்?

Lankathas Pathmanathan

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan

COVID காரணமாக Brampton நகர Amazon பூர்த்தி மையம் மூடல் -பின்னணி என்ன?

Gaya Raja

Leave a Comment