September 14, 2026
தேசியம்
செய்திகள்

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

கருவூல வாரியத் தலைவர் Mona Fortier, கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் ஆகியோர் ஒப்பந்தப் பேச்சுக்களின் தாமதம் குறித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.

கனடாவின் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (23) ஐந்தாவது நாளாக தொடர்கிறது.

கடந்த வியாழக்கிழமை (20) இரவு முன்வைக்கப்பட்ட புதிய சலுகைக்கு மத்திய அரசு பதிலளிக்கத் தவறியதாக பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் Chris Aylward குற்றம் சாட்டினார்.

ஆனாலும் வெள்ளிக்கிழமை (21) சந்திப்பதற்கான கோரிக்கைக்கு பொதுச் சேவை ஊழியர் சங்கம் பதிலளிக்கவில்லை எனவும் சனிக்கிழமை (22) பிற்பகல் திட்டமிடப்பட்ட கூட்டத்தை இரத்து செய்ததாகவும் கருவூல வாரியத் தலைவர் Mona Fortier தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விடையத்தில் பிரதமர் Justin Trudeau தலையிட வேண்டும் என பொதுச் சேவைக் கூட்டணியின் தலைவர் Chris Aylward அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

B.C. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment