September 28, 2026
தேசியம்
செய்திகள்

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளார்.

2021 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது குறித்து சீன இராஜதந்திரி ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் ஊடக அறிக்கை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய செய்தியறிக்கைகளை வெளியிட்ட Global News, அதன் தாய் நிறுவனமான Corus Entertainment ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து Liberal கட்சியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் Han Dong கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

Related posts

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சி தலைவர் அடுத்த வாரம் தெரிவு

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் முதற்பார்வை வெளியீடு!

Gaya Raja

Leave a Comment